தட்சிண கன்னடாவின் தலைசிறந்த கடற்கரைகள்
கர்நாடக மாநிலத்தின் உள்ள தட்சிண கன்னடா மாவட்டம், கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு புகழ்பெற்ற பல கடற்கரை கள் உள்ளன. இவை இயற்கை, பசுமை, சுவையான கடல் உணவுகள் கிடைக்கும் இடமாக உள்ளன. இதனால், பல சுற்றுலாப் பயணியரின் தேர்வாக தட் சிண கன்னடா மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் கடற்கரைகள் ஒவ்வொன்றும் தனித்தன் மை கொண்டவை. குடும்பத்தோடு சுற்றுலா, நண்பர்களுடன் சாகச அனுபவம் ஆகியவற்றை விரும்புவர்களுக்கு இந்த கடற்கரைகள் சிறந்த இடமாக இருக்கும். இங்கு படகு சவாரி, ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள பிரபலமான கடற்கரைகளின் லிஸ்ட் இதோ. பனம்பூர் மங்களூரு அருகே அமைந்துள்ளது பனம்பூர் கடற்கரை. இது மிகவும் பிரபலமான, அதிக சுற்றுலாப்பயணியர் வரும் கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரை தூய்மையாக காணப்படுவதால், பலரும் வருகின்றனர். படகு சவாரி உள்ளிட்ட நீர் விளையாட்டுகள் உள்ளன. ஆண்டுதோறும் நடக்கும் பனம்பூர் பீச் விழாவுக்கு பங்கேற்க ஏராளமானோர் வருகின்றனர். இங்கு பட்டம் விடும் போட்டியும் நடக்கும். சூரத்கல் தட்சிண கன்னடாவில் உள் ள மற்ற கடற்கரைகளுடன் ஒப்பிடும்போது, சூரத்கல் கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம் குறைவு. இது அமைதியான சூழல் கொண்டது. இதனால், அமைதி விரும்பிகளின் தேர்வாக உள்ளது. மணல், பாறைகள், விளக்கு கோபுரம் ஆகியவை இந்த கடற்கரையின் சிறப்பு. சூரிய அஸ்தமனத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட் டுகின்றனர். தன்னிர்பாவி மங்களூரில் உள்ள மிகவும் அமைதியான கடற்கரைகளில் தன்னிர்பாவியும் ஒன்று. படகு சே வையின் மூலம் தன்னிர்பாவி கடற்கரையை அடையலாம். பசுமை சூழலும், சுத்தமான மணலும், மீன் உணவுகள் பிரபலம். இதை சாப்பிடுவோர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். உல்லால் வரலாற்றுச் சிறப்பும், இ யற்கை அழகும் நிறைந்தது உல்லால் கடற்கரை. பசுமையான தென்னை மரங்கள், அமைதியான அலைகள், மற்றும் குறைந்த கூட்டம் கொண்ட சூழல் சுற்றுலாப் பயணியரை கவர்கிறது. மல்பே: மல்பே கடற்கரை மங்களூரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. நீர்விளையாட்டு மற்றும் சாகச அனுபவங்களுக்கு ஏற்ற து. இங்கிருந்து செயின்ட் மேரிஸ் தீவிற்குச் செல்ல படகு வசதி உள்ளது. அந்தத் தீவின் எரிமலைக் கற்கள் பார்வையாளர்களை கவரும். சிறந்த காலம்: நவம்பர் முதல் பிப்ரவரி வரை. எடுக்க வேண்டியவை: கூலர்கள், தண்ணீர் பாட்டில். தங்குவதற்கான வசதி: மங்களூரு மற்றும் உடுபியில் பல ஹோட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், கடற்கரையில் குப்பை போட வேண்டாம் . - நமது நிருபர் -