டிரெண்டாகும் லியோ மாதம்; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படம் லியோ இம்மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், கிரண், சாண்டி, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெளிநாடுகளில் 6 வாரங்களுக்கு முன்னரே படத்தின் முன்பதிவு துவங்கியது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 500 டிக்கெட்கள் வரை விற்று சாதனை புரிந்து உள்ளது.இதற்கு முன்னர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் டிக்கெட்கள் விற்பனையில் முன்னிலையில் இருந்தது. தற்போது பதானை மிஞ்சியுள்ளது லியோ. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது. துவங்கிய உடனே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.