உ.பி., உணவகத்தில் உணவு பரிமாறும் பெண் ரோபோக்கள்..!
உ.பி., தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள உணவகத்தில் ரூபி, திவா என்னும் இரு ஏஐ பெண் ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. 'தி ரோபோட் ரெஸ்டாரன்ட், தி எல்லோ ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்துக்கு சாப்பிட வருவோருக்கு இந்த இரண்டு ஏஐ ரோபோக்களும் உணவு பரிமாறும், மேஜையை சுத்தம் செய்யும், தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கும். சாப்பிட்ட பின்னர் பில் கொண்டுவந்து கொடுக்கும். வெறும் மூன்று மணிநேரம் இந்த ரோபோக்களுக்கு சார்ஜ் ஏற்றினால், தொடர்ந்து 12 மணிநேரம் உணவகத்தில் வெயிட்டர் வேலை பார்க்கும். கூகுள் நேவிகேஷன் செயலி புகுத்தப்பட்ட இந்த ரோபோக்கள், நடக்கும்போது எதிரே யாராவது குறுக்கே வந்தால் உடனே நின்றுவிடும். 'கொஞ்சம் வழிவிடுங்கள்' எனக் கூறும். தான் செல்லும் வழியில் இடர்பாடுகள் இல்லை என்பதை சென்சார் உதவியுடன் உறுதி செய்துகொள்ளும் இந்த ரோபோக்கள், உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.