/ டெக்னாலஜி / ஸ்டார்ட்அப்கள் / ஐரோப்பிய யூனியனின் புதிய டிஜிட்டல் சந்தை சட்டம்; பாதிப்புக்குள்ளாகும் மெகா டெக் நிறுவனங்கள்..!
ஐரோப்பிய யூனியனின் புதிய டிஜிட்டல் சந்தை சட்டம்; பாதிப்புக்குள்ளாகும் மெகா டெக் நிறுவனங்கள்..!
உலகையே டெக் மோகத்தில் மூழ்கவைத்த மெகா நிறுவனங்கள் என்றால் ஆப்பிள், மெட்டா, ஆப்ல்ஃபபெட், பைட் டேன்ஸ், மைக்ரோசாஃப்ட் ஆகியவைதான். இந்த நிறுவனங்களில் செயலிகள், மென்பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை. விளம்பர வருவாய் மூலம் இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு பலகோடி டாலர் லாபத்தை பல நாடுகளில் ஈட்டி வருகின்றன. தனிநபர் பயன்பாடு துவங்கி, அரசு தனியார் துறை பயன்பாடு வரை பல மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் மைக்ரோசாஃப்ட், ஆல்ஃபபெட் ஆகிய நிறுவனங்களுக்கு சில வியாபார கட்டுப்பாடுகளும் உண்டு. உலக நாடுகள் தங்கள் தொழில்நுட்ப சட்டங்களை புதுப்பிக்கும்போது இந்த வியாபார கட்டுப்பாடுகள் இந்த பெரு நிறுவனங்களை சிறிய அளவிலாவது பாதிக்கும். அப்படிப்பட்ட ஓர் பாதிப்பு தற்போது இந்த டெக் ஜாம்பவான் நிறுவனங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.