பைன் மர ரெசினால் இத்தனை பயன்களா?
பைன் மரம் உலகில் உயரமாக வளரக் கூடிய மரங்களில் ஒன்று. ரஷ்யா, ஜப்பான், போர்ச்சுகல், கிழக்கு அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வளரும் இவை 24 மீட்டர் நீளம் வளரக்கூடியவை. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மரத்தில் இருந்து எடுக்கப்படும் ரெசின் (resin) என்னும் கோந்து போன்ற திரவம் பலவகையில் உதவுகிறது. பைன் மரத்தின் ரெசின் எந்தெந்த துறைகளில் உதவுகிறது எனத் தெரிந்துகொள்வோமா?பைன் மரத்துக்கு வயதாக ஆக மரத்தின் வெளிப்பகுதியில் பிளவுகள் ஏற்பட்டு மற்ற மரங்கள்போல ரெசின் வெளியாகும். மரத்தின் சைலம் உயிரி என்சைம்கள் தயாரிக்கும் இந்த ரெசின் திரவம் மரத்தின் ஓரங்களில் இருந்து ஒழுகத் துவங்கும். மரத்தை கவனமாகக் கீறி இறுகிய இந்த திரவத்தை எடுத்து சூடாக்கி சுத்திகரித்தால் கிடைப்பதுதான் அடர்மஞ்சள் அல்லது தங்க நிறத்திலான ரெசின். கோந்து போன்று கைகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது ரெசின். இந்த ரெசினில் பல்வேறு தாதுக்கள், சர்க்கரை, ஊட்டச்சத்துகள் அடங்கி இருக்கும்.ரெசினில் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் தன்மை உண்டு. இதனால் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய ரெசின் பயன்படுகிறது. வைட்டமின் சி அதிகம் நிறைந்த ரெசினை அடிபட்ட இடத்தில் தடவி மருத்துவமனை கொண்டு செல்லும் வரை ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம்.