ஐஸ்கட்டி பயன்படுத்தி இந்த 6 பிரச்னைகளை தீர்க்கலாம்..!
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், தினமும் ஐஸ்கட்டியை கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதால், முகப்பரு குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஐஸ்கட்டியை நேரடியாக முகத்தில் வைப்பதால் காயம் ஏற்படலாம். எனவே ஐஸ்கட்டிகளை ஒரு துணி அல்லது கவரில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம்.1.வீக்கத்தை குறைக்கும் : முகத்தில் ஐஸ்கட்டிகளை பயன்படுத்தும் போது ரத்த நாளங்கள் சுருங்குவதால் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் குறையும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சுளுக்கு, காயம் போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதில் ஐஸ்கட்டிகள் நல்ல பலனை தரும்.2. வலி நிவாரணி : ஐஸ் தெரபி என்பது ஐஸ்கட்டிகளை சருமத்தின் நரம்புகளில் வைக்கும் போது தற்காலிக வலி நிவாரணியாக செயல்படும். வலி உணர்வை குறைப்பதில் ஐஸ்கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 3. ஒற்றை தலைவலிக்கு தீர்வு :