உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / ரூ.1 லட்சம் முதலீட்டில் இந்த 5 தொழில்களை துவங்கலாம்.!

ரூ.1 லட்சம் முதலீட்டில் இந்த 5 தொழில்களை துவங்கலாம்.!

தற்போது நிறைய பேர் தங்களது வழக்கமான வேலையை விட்டு, தொழில் துவங்க ஆர்வமுடன் முன்வருகின்றனர். சமீபத்தில் தொழில் துவங்கி, சந்தையில் தனக்கென இடத்தை பல நிறுவனங்கள் பெற்றுள்ளன. அந்தவகையில், மிகப்பெரிய முதலீடு இருந்தால் மட்டுமே தொழில் துவங்க முடியும் என்பதில்லை. சிறிய அளவில் துவங்கப்பட்ட பல தொழில்கள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. இதை போன்று, ரூ.1 லட்சம் முதலீட்டுடன் துவங்க கூடிய சிறிய தொழில்கள் குறித்து பார்ப்போம்.

1. மொபைல் போன் பழுதுநீக்கும் மையம் :

இன்றைக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைவரிடம் ஸ்மார்ட்போன் உள்ளது. மொபைல் போன் பழுது நீக்க சேவையுடன், ஸ்மார்ட் போன் தொடர்புடைய உதிரி பாகங்களை விற்பனை செய்யலாம்.நகரம் அல்லது கிராமம் என எந்த இடமாக இருந்தாலும், எளிதாக இத்தொழிலை துவங்கலாம்.

2. கூரியர் சேவைகள் :

உள்ளூர் கூரியர் நிறுவனத்துடன் இணைந்து, ஒருவர் கூரியர் சேவை ஏஜென்சி தொழிலில் இறங்கலாம். இது தவிர, பார்சல்களை வினியோகிக்க சொந்தமாக நிறுவனத்தை துவங்கலாம். முதலில், சிறிய அளவில் நிறுவனத்தை துவங்கி, பின்னர் படிப்படியாக விரிவுப்படுத்தலாம்.

3. கார் வாஷிங் ஸ்டேஷன் :

கார் வாஷிங் ஸ்டேஷன் துவங்க, உரிமையாளருக்கு முதலில் சொந்தமாக இடம் தேவைப்படும். கார்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், நிறைய கார் வாஷிங் ஸ்டேஷன்கள் இல்லாத, கிராமங்களில் கூட கார் வாஷிங் தொழிலை துவங்கலாம்.

4. பூக்கள் விற்பனை நிலையம் :

பிறந்தநாள், திருமணம், துக்க நிகழ்வு என பல்வேறு இடங்களில் பூக்களுக்கு தேவை நாள்தோறும் இருக்கிறது. மேடை அலங்காரத்திற்கு மொத்தமாக பூக்களை சப்ளை செய்யலாம். ரூ.1 லட்சம் முதலீட்டில், எளிதாக இந்த தொழிலை துவங்கலாம்.

5. வீட்டுத்தோட்டம் :

வீடுகளில் தோட்டம் அமைத்து செடிகளை, இணையதளம் மற்றும் செயலிகள் வாயிலாக விற்று சம்பாதிக்கலாம். காய்கறிகள், மூலிகை செடிகள் போன்றவைக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறைந்தபட்ச தொகையான ரூ.1 லட்சம் முதலீட்டில், சிறிய அளவில் செய்தாலே நல்ல லாபத்தை ஈட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை