உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வீட்டில் சண்டை வேண்டாமே! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வீட்டில் சண்டை வேண்டாமே! | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வீட்டில் சண்டை வேண்டாமே! இன்று மகாளய பட்சம் ஆரம்பமாகிறது. தட்சிணாயணம் எனப்படும் சூரியனின் தெற்கு நோக்கிய பயண காலத்தில் மகாளய பட்சம் வரும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி மாத பிரதமை திதி துவங்கி, அமாவாசை வரையுள்ள தேய்பிறை காலத்தை, மகாளய பட்சம் என்பர். இது முன்னோர் வழிபாட்டுக்குரிய காலம். இன்று துவங்கி, பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் செய்வது அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த பாவங்கள் விலகுவதுடன், நாம் செய்த பாவங்கள் விலகவும் இந்த வழிபாடு வழி வகுக்கும். இந்த விரத காலத்தில், வீட்டில் சண்டை போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், நம் முன்னோர் சார்பில் பிதுர் தேவதைகள் நம் வீட்டு வாசலுக்கு வருவர். அவர்கள் நம் வீட்டின் நடப்புகளை நோட்டமிடுவர். வீட்டில் சண்டை சச்சரவு இருந்தால், “உங்கள் வீட்டில் இன்னும் சண்டை தொடர்கிறது,” என்று முன்னோர்களிடம் சென்று சொல்வர். நாம் வாழ்ந்த காலத்தில் துவங்கிய சண்டை, இன்னுமா தொடர்கிறது என நம் முன்னோர் வருத்தப்படுவர். எனவே, இன்று முதல் கருத்து வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுத்து வாழுங்கள். மகாளய காலத்தில் மட்டுமல்ல. என்றைக்குமே அது குடும்பத்துக்கு நல்லது.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை