உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தாழம்பூ மாலை அணியும் ஆஞ்சநேயர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

தாழம்பூ மாலை அணியும் ஆஞ்சநேயர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

தாழம்பூ மாலை அணியும் ஆஞ்சநேயர் கோவில்களில் பொதுவாக தாழம்பூ மாலைகளை அணிவதில்லை. இந்தப் பூவுக்குள் பாம்பு இருக்கும் என்பதாலும் இது சிவனிடம் சாபம் பெற்ற பூ என்பதாலும் இதை ஒதுக்கி விட்டனர். உண்மையில் இது நறுமணம் மிக்கது. இந்தப்பூவை வைத்து அக்காலத்தில் பெண்கள் ஜடை பின்னுவர். கூந்தல் நறுமணம் மிக்கதாக இருக்க இவ்வாறு செய்வர். கர்நாடக மாநிலத்தின் தங்கச்சுரங்கமான கோலாரில் இருந்து 30 கி.மீ. துõரத்தில் முல்பாகல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயநருக்கு தாழம்பூ மாலை அணிவித்து வழிபடுகின்றனர். ராமருக்கு துளசி மாலை அணிவிப்பதால், அவரது சீடரான ஆஞ்சநேயருக்கும் துளசி மாலை அணிவிக்கும் வழக்கம் வந்தது. பிற்காலத்தில் வெற்றிலை மாலை அணிவித்தனர். ஆனால் தாழம்பூ மாலை அணிவிக்கும் ஒரே கோவில் இது மட்டுமே. தமிழகத்தில் இருந்து ஓசூரில் இருந்து கோலார் சாலையில் 87 கி.மீ. சென்றால் முல்பாகலை அடையலாம். இதை கர்நாடகத்தின் கோவில் நகரம் என்பர். இங்கு நிறைய கோவில்கள் உள்ளன.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !