மஞ்சள் மகிமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மஞ்சள் மகிமை மகாலட்சுமியின் அம்சமாகவும் அவளது மனதிற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள். மஞ்சளை மகாலட்சுமியின் இருப்பிடமாகச் சொல்வார்கள். மஞ்சள் பூசி குளிக்கும் பெண்கள் லட்சணமாக இருப்பர். “இவள் பார்க்க மகாலட்சுமி போல இருக்கிறாள்” என்று சொல்லும் வழக்கம் மஞ்சள் பூசும் பெண்களை கருத்தில் கொண்டு தான் வந்தது. மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்யும் போது முனை முறியாத அரிசியுடன் மஞ்சள் பொடியைக் கலந்து துõவும் வழக்கம் இருக்கிறது. இந்த மஞ்சள் அரிசி மணமக்களை செல்வச்செழிப்புடன் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.
மார் 24, 2025