/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ரிஷப வாகனத்தில் புறப்பட்ட சுவாமிகள் | Chandramouleeswarar | Trichy | Temple
ரிஷப வாகனத்தில் புறப்பட்ட சுவாமிகள் | Chandramouleeswarar | Trichy | Temple
கரூர் குளித்தலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று காவிரி ஆற்றில் எட்டு ஊர்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்று கூடும் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். இரவு முழுவதும் வழிபாடு முடிந்து சுவாமிகள் மீண்டும் அந்தந்த ஊருக்கு செல்வது தொன்று தொட்டு நடக்கிறது. இதனை முன்னிட்டு திருச்சி முசிறி சந்திரமெளலீஸ்வரர் கற்பூரவள்ளி மற்றும் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் சிவகாமசுந்தரி சுவாமிகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக திரளான பக்தர்களுடன் வீதி உலா வந்து குளித்தலை தைப்பூச தீர்த்தவாரி திருவிழாவிற்கு புறப்பாடு நடந்தது.
பிப் 11, 2025