உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பெயர் சூட்டி தருமபுரம் ஆதீனம் மகா சன்னிதானம் சிறப்பு பூஜை | T.Malai, Vaitheeswaran Temples | Arrival

பெயர் சூட்டி தருமபுரம் ஆதீனம் மகா சன்னிதானம் சிறப்பு பூஜை | T.Malai, Vaitheeswaran Temples | Arrival

பெயர் சூட்டி தருமபுரம் ஆதீனம் மகா சன்னிதானம் சிறப்பு பூஜை | T.Malai, Vaitheeswaran Temples | Arrival of New Elephants மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய இக்கோயில் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு சொந்தமான தையல்நாயகி என்ற பெண் யானைக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு மதம் பிடித்து டாப்ஸ்லிப் முகாமிற்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுப்படி, வைத்தீஸ்வரன் கோயில் உட்பட 5 கோயில்களுக்கு புதிய யானைகள் வாங்க வனத்துறை தடையின்மை சான்று வழங்கியது. அதன் ஒரு பகுதியாக தருமபுரம் ஆதீனம் சார்பில் சென்னை சேவா டிரஸ்ட் மூலம் அசாமில் இருந்து 13 வயது ஆண் யானை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. யானைக்கு தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து முத்தையா என பெயர் சூட்டி பழங்கள் வழங்கி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். byte: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 00:03 - 02:19 நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தி.மலை தி.மலை கோயிலுக்கு புதிய யானை வருகை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு, உடல் நலக்குறைவால் கடந்த 2018ம் ஆண்டு இறந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயது 6 அடி உயரம் கொண்ட ஹீராலால் என்ற ஆண் யானை கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று இரவு ராஜகோபுரம் பகுதியில் வந்திரங்கிய யானைக்கு மாலை அணிவித்து வரவேற்று கோயிலுக்கு அழைத்து சென்றனர். இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் யானை ஹீராலால் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் பயிற்சி திருப்திகரமாக இருந்தால் மட்டுமே மாட வீதிகளில் யானை வலம் வர அழைத்து வரப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

செப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை