பெருமாள் கோயிலில் நந்தி வேறெங்கும் காணாத அதிசயம்! | Hosur Perumal Temple | Temple Vlog | Hosur ancie
சீதைக்கு ராமர் உருவாக்கிய குளம் குன்றின் மீது பல பொக்கிஷம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வெங்கடேஸ் நகரில் அமைந்துள்ளது லக்ஷ்மி வெங்கட்ரமண சுவாமி கோயில். குன்றின் மீது இயற்கை எழில் கொஞ்ச ராமர், சீதையின் வரலாறை தாங்கி நிற்கிறது இந்த பெருமாள் கோயில். சமண தீர்த்தங்கரர் சிற்பங்களும், சமணத் துறவிகள் வாழ்ந்தற்கான சுவடுகளும் இந்த குன்றில் ஏராளமாக காணப்படுகின்றன. பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதும் தனி சிறப்பு. பல்லாண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றாக கூடி மாட்டு சந்தை நடத்தி உள்ளனர். அப்போது மாடுகளில் ஒன்று புதருக்குள் இருந்த இந்த வெங்கடேஸ்வரசுவாமியின் சிலையை கண்டு, தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்துள்ளது. இதைக்கண்ட அந்த மாட்டுக்கு சொந்தக்காரர் வெங்கட் ரமணப்பா 1878ல் இந்த சிலையை மலை மீது வைத்து கோயில் கட்டி வழிபட்டு உள்ளார். காளை பெருமாளை அடையாளம் கண்டதால், அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர்.