/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ மகா கும்பமேளாவில் 3டி ஸ்பெஷல் ஷோ சிறப்பு | Prayagraj Kumbhmela | Uttar Pradesh
மகா கும்பமேளாவில் 3டி ஸ்பெஷல் ஷோ சிறப்பு | Prayagraj Kumbhmela | Uttar Pradesh
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 13ம் தேதி துவங்கிய பிரமாண்ட திருவிழாவில், இதுவரை 10.26 கோடி பேர் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சன்னியாசிகள், அகோரிகள், நாகா பாபாக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பல கோடி பேர் வந்து செல்லும் பகுதியை துாய்மையாக வைக்க, 15 ஆயிரம் துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஜன 24, 2025