/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சபரிமலையில் மகரஜோதி தரிசனம் | Sabarimala | Mahara jothi dharsan | Dinamalar
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் | Sabarimala | Mahara jothi dharsan | Dinamalar
சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் திறக்கப்பட்டு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று மகர ஜோதி தரிசனத்தையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி கொண்டுவரப்பட்டு சாஸ்தா கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு இருந்தது. உச்சி பூஜைக்கு பின் திருவாபரண பெட்டி, சாஸ்தா கோயிலில் இருந்து புறப்பட்டு மாலையில் ஐயப்பன் சன்னிதானத்தை வந்தடைந்தது. திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதே சமயம், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு 3 முறை காட்சி அளித்தார்.
ஜன 14, 2025