பில்லி சூனியம் ஏவல் விரட்ட ஒரே வழி - பத்ரகாளி அம்மன் முன் இதை செய்தால் போதும் | Shivatemple | spirit
ஆன்மிகம் மணலால் ஆன லிங்கம் எங்கும் பார்க்காத அதிசயம் 1500 ஆண்டு அபூர்வ சங்கு பார்த்து இருக்கீங்களா? செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகை என்ற ஊரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் சிவபெருமான் மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி தந்ததால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கயிலையில் சிவன் பார்வதி திருமணத்தை காண தேவர்கள், முனிவர்கள் சென்றனர். இதனால் வட பகுதி தாழ்ந்தும், தென்பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. இதை சமன் செய்ய, தென்பகுதியை நோக்கி செல்லும்படி அகத்தியரிடம் கூறினார் சிவன். அதற்கு ஒரு கண்டிஷன் போட்டார் அகத்தியர். நான் வேண்டும் இடங்களில் எல்லாம் சிவனின் திருமண கோலத்தை காட்டி அருள வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அதன் ஒரு பகுதியாக பெரும்பேர்கண்டிகைக்கு வந்தார் அகத்தியர். அங்குள்ள சஞ்சீவிமலை மீதுள்ள முருகனை வழிபடச்சென்றார்.