உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பிரபலங்கள் வழிபடும் வரமுக்தீஸ்வரர் கோயில் - ஒரு முறை சென்றாலே பலன் | Shivatemple | Varamuktheeswarar

பிரபலங்கள் வழிபடும் வரமுக்தீஸ்வரர் கோயில் - ஒரு முறை சென்றாலே பலன் | Shivatemple | Varamuktheeswarar

திருவள்ளூர் மாவட்டம் எருமை வெட்டிப்பாளையம் என்ற அழகிய இடத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட, 1,800 ஆண்டுகள் பழமையான வரமுக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த இடத்தின் பழைய பெயர் மகிஷாசுரமர்த்தனம். தமிழில் எருமை வெட்டிப்பாளையம் என்று மொழிபெயர்க்கப்பட்டது. சீதை கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற போது மகிஷாசுரன் வந்து அவளை சீண்டினான். சீதை பயந்து ஓடி சென்று ராமரின் இடது தொடையில் அமர்ந்தாள். மகிஷாசுரன் தவம் செய்த போது, சிவனிடம் ஒரு வரம் பெற்றான். அதன்படி பெண்கள் மட்டுமே அவனின் வாழ்க்கையை முடிக்க முடியும். அதன்படி, ராமர் நான்கு திசைகளிலும் தர்பாய் புல்லை வைத்தார். அவர்கள் தேவிகளாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்தனர். இன்று அவர்கள் அங்காள பரமேஸ்வரி, பொன்னியம்மன், மூலக்கல் அம்மன், கேகைத்தம்மன் என்ற பெயர்களில் காவல் தெய்வங்களாக உள்ளனர். இங்கு மகிஷாசுரன் கொல்லப்பட்டதால் மகிஷாசுரமர்த்தனம் என்ற பெயர் வந்தது. தமிழகத்தில், பெரும்பாலான கோயில்களில் 3,5,7 போன்ற ஒற்றைப்படை எண்களில் ராஜகோபுரம் உள்ளது.ஆனால் இந்த கோயில் ராஜகோபுரம் நான்கு வேதங்களை கணக்கிட்டு, இந்த கோபுர நிலைகள் அமைந்துள்ளது தனி சிறப்பு.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !