/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சூரிய பூஜையின் போது நடக்கும் அதிசயம்- உலகமே வியக்கும் நிகழ்வு | Shivatemple | Krishnagiritemple
சூரிய பூஜையின் போது நடக்கும் அதிசயம்- உலகமே வியக்கும் நிகழ்வு | Shivatemple | Krishnagiritemple
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அத்திமுகத்தில் ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர். தயார் காமாட்சி, அகிலாண்டேஸ்வரி. ஐராவத யானை இந்த கோயிலில் வழிபட்டதால் அதன் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சியும் ஐராவதேஸ்வரர் இரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரியுடன் அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கின்றனர். தென்மேற்கு மூலையில் பழமையான பாம்பு புற்று உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்கினார். எனவே அவர் சம்ஹார தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.
செப் 13, 2024