திரளான பக்தர்கள் தரிசனம்| Temple festival
மதுரை எஸ்.எஸ். காலனி பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் தை மாத இரண்டாவது வெள்ளியையொட்டி திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீகற்பக விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜன 27, 2024