உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஆடி வெள்ளி ஸ்பெஷல் - ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் வரலாறு | Templevlog | Oothukaaduamman

ஆடி வெள்ளி ஸ்பெஷல் - ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் வரலாறு | Templevlog | Oothukaaduamman

காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு என்ற ஊரில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. தொண்டை மண்டல பகுதியை ஆட்சி செய்த விஜய நகர மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணதேவராயர், ஒரு நாய் துணையோடு காட்டுக்கு வேட்டையாட சென்றனர். வேட்டையாடுவதில் மட்டுமே அவர் ஆர்வம் இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. தாகம் எடுத்த போது, மன்னன் நீர் நிலைகளை தேடி அலைந்தார்.எங்கும் இல்லை. ஒரு கட்டத்தில் சோர்வாகி மரத்தடியில் அமர்ந்து விட்டார். உடன் வந்த நாய், மன்னன் நிலைமையை புரிந்துக்கொண்டு நீரை தேடி அலைந்தது. தனது உடலை நீரில் நனைத்து மன்னனை நோக்கி விரைந்தது. உடலை சிலிர்த்தது. அதில் இருந்து தெறித்த நீர் மன்னன் முகத்தில் பட்டு கண் திறந்தான். நாய் கண்டுபிடித்த ஓடை நோக்கி இருவரும் சென்றனர். அதில் நீரை பருக முயன்ற போது அருகே எலுமிச்சை ஒன்று மிதந்து வந்தது. அடுத்தது ஊற்று நீர்போல் மேல் தென்பட்டது. ஒரு அம்மன் சிலை ஒன்று மேலெழுந்து வந்தது. மன்னன் ஆச்சரியம் அடைந்தார். அதை சேவகர்கள் மூலம் வெளிக்கொண்டு வந்து பெரிய கோயிலை கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அம்மன் சிலை, காட்டு எல்லைப்பகுதி ஊற்று நீர் தடாகத்தில் கிடைத்ததால், அம்மனுக்கு ஊற்றுக்காடு எல்லையம்மன் என்ற பெயர் வந்தது. அந்த பெயர் மருவி ஊத்துக்காடு என்றானது. கிருஷ்ணதேவராயரின் மெய்க்காப்பாளர் நாகல் நாயுடு கனவில் அம்மன் தோன்றி, தன்னை ஊரின் கிழக்கு பகுதியில் வைத்து வழிபட கூறினார். அதன்படியே மாற்றப்பட்டது. பிரதிஷ்டை செய்த கொஞ்ச நேரத்திலேயே அம்மனின் உக்கிர பார்வையால் அந்த பகுதி பற்றி எரிந்தது. இதனால் ஊர் மக்கள் பயந்தனர். அதன் பிறகு அம்மனை நுழைவு வாயிலை பார்த்தபடி இல்லாமல் இடம் மாற்றி வைத்தனர். அதன் பிறகு பூஜைகள் செய்து சாந்த ரூபிணியாக பிரதிஷ்டை செய்தனர். கோயிலுக்குள் நுழைந்ததுமே நான்கு கால் மண்டபத்தை காணலாம். பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் பலிபீடம் வட்ட வடிவில் இருக்கும். இங்கு கூம்பு வடிவில் இருக்கிறது. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோயில் அழகாய் காட்சி தருகிறது. இந்த கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகால பூஜை நடக்கிறது. ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி