உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அபூர்வ கோலத்தில் காட்சி தரும் சிவனை வேண்டினால் காத்திருக்கும் பலன்கள் | Thakkolam | Jalantheeswarar

அபூர்வ கோலத்தில் காட்சி தரும் சிவனை வேண்டினால் காத்திருக்கும் பலன்கள் | Thakkolam | Jalantheeswarar

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் ஜலநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஜலநாதீஸ்வரர். தாயார் கிரிராஜ கன்னிகாம்பாள். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உத்தராயண காலத்தில் இந்த லிங்கம் செந்நிறமாக மாறி காட்சி தரும். தட்சிணாயன காலத்தில் இதே லிங்கம் வெண்மையாகும். தேவகுருவான பிரகஸ்பதியின் தம்பி உததி முனிவர் நோய் நீங்க, சிவனை வழிபட, நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை பாயவிட்டார். அது இங்குள்ள சிவலிங்கத்தை சுற்றி வந்து, மற்றொரு நந்தியின் வாயில் இருந்து வெளியேறியது. இதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் குணமானார். ஜலம், அதாவது தீர்த்தம் சூழ்ந்து சென்றதால் சிவன் ஜலநாதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி