ஆண்டாள் மாலைக்கு திருமலையில் சிறப்பு பூஜை | TTD| Tirumala Devastanam| TTD Brahmotsavam| Andal Malai
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் காலை, இரவு நேரங்களில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார். 5ம் நாளான செவ்வாய் கிழமை காலை மோகினி அலங்காரமும், இரவு கருட வாகன சேவையும் நடைபெறவுள்ளது. இந்நாளில் ஏழுமலையானுக்கு சூட்டுவதற்காக, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை திருப்பதி வந்தடைந்தது. ஆண்டாள் கொடுத்து அனுப்பிய மாலைக்கு, திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின், திருமலையில் நான்கு மாட வீதிகளில் வழியாக கொண்டு செல்லப்பட்டது. யானை அணிவகுக்க மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது.