தமிழகம் திரும்பினால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டதாக வேதனை
தமிழகம் திரும்பினால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டதாக வேதனை | Chennai | Kabaddi tournament in Punjab | Kabaddi players were attacked பஞ்சாபில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையோன கபடி போட்டி நடைபெற்றது. இதில் தென் மாநில அணிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வட மாநில நடுவர்கள் புள்ளிகளை குறைத்து கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தங்கள் அணிக்கு குறைந்த புள்ளிகளை அறிவித்ததாக தமிழக வீராங்கனைகள் வட மாநில நடுவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வட மாநில வீராங்கனைகள் மற்றும் வட மாநில நடுவர்கள் சிலர் தமிழக வீராங்கனைகளை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விசாரணை நடத்தியது. தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பான இடத்திற்கு ஆணைய அதிகாரிகள் அழைத்து சென்று தங்க வைத்தனர். இதுதொடர்பான விசாரணை நடக்கிறது. தொடர்ந்து தமிழக வீராங்கனைகள் டில்லியில் இருந்து தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.