உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சென்னையில் ₹4 கோடி போதை பொருள்! சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? | meth smuggling | chennai

சென்னையில் ₹4 கோடி போதை பொருள்! சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? | meth smuggling | chennai

சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் சர்வீஸ் ரோட்டில் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். இளைஞர்கள் 2 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த சிறிய பொட்டலத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், சர்வதேச போதை கும்பல் கையாளும் மெத்தம்பெட்டமைன் என்னும் விலை உயர்ந்த போதை பொருள் 3 கிராம் இருந்தது. அவர்களிடம் பட்டா கத்தியும் பறிமுதல் செய்தனர். தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில் பிடிபட்டவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த மெக்கானிக் ராஜா வயது 19, பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த தனுஷ் வயது 18 என்பது தெரிந்தது. காசிமேடை சேர்ந்த யாசின் வயது 21, சாத்தங்காடை சேர்ந்த சுகேல் அகமது வயது 20 ஆகியோர் மெத்தம்பெட்டமைனை மொத்தமாக விற்பதாகவும், அவர்களிடம் வாங்கி சிறிய அளவில் தாங்கள் சப்ளை செய்வதாகவும் ராஜா, தனுஷ் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து யாசின், சுகேலை தனித்தனியாக போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் சுகேல் வீட்டில் மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருப்பத தெரிந்தது. அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். மொத்தம் 4 கிலோ 800 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். 4 பேரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் சர்வதேச போதை கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. போதை கும்பலிடம் பிடிபட்ட மெத்தம்பெட்டமைன் மதிப்பு 4 கோடி ரூபாயை தாண்டும் என்று போலீசார் கூறினர்.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை