சந்தன கட்டை டீலை போலீஸ் மோப்பம் பிடித்தது எப்படி? | sandalwood case | chennai police
சென்னை புளியந்தோப்பு பகுதியில் சந்தன மரம் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு இன்பார்மர் மூலம் தகவல் வந்தது. புளியந்தோப்பு பகுதியில் பழைய இரும்பு கடை வைத்திருக்கும் ராபின்சன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகத்தில் அவரது குடோனை சோதனை போட்டனர். அதில் 850 கிலோ சந்தனை கட்டைகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சென்னை சூறைவிச்சூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ராபின்சனுக்கு அறிமுகம் ஆனார். அவரது உறவினர் தேவேந்திரன் என்பவர் அரியலூர் பகுதியில் முள் வெட்டும் வேலை பார்க்கிறார். அவருக்கு தான் சந்தனை கட்டைகள் கிடைத்தன. இது பற்றி தகவலை சுரேஷிடம் சொல்லி இருக்கிறார். சுரேசும் ராபின்சன் மூலம் விற்க ஏற்பாடு செய்து வந்துள்ளார். அந்த சமையத்தில் தான் விஷயத்தை போலீஸ் இன்பார்மர் மோப்பம் பிடித்து இருக்கிறார். கைப்பற்றப்பட்ட 850 கிலோ சந்தன கட்டைகளின் மதிப்பு 85 லட்சம் ரூபாய் ஆகும். அதை சட்டவிரோதமாக விற்க முயன்ற சுரேஷ், ராபின்சனை போலீசார் கைது செய்தனர். தேவேந்திரனை தேடி வருகின்றனர். கைதான சுரேஷ் புரட்சி பாரதம் கட்சியின் எக்மோர் பகுதி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.