உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பணம் வசூல் செய்வதில் திருநங்கைகள் மோதல்

பணம் வசூல் செய்வதில் திருநங்கைகள் மோதல்

பணம் வசூல் செய்வதில் திருநங்கைகள் மோதல் | Transgender Conflict | Seminude Protest | In Front of Police Station | Three Tatnsgenders Arrested |Chennai சென்னை புளியந்தோப்பு திரு வி க நகரைச் சேர்ந்தவர் சல்மா. திருநங்கையான இவர் திருநங்கைகள் அணி தலைவி. சென்னை மூலக்கொத்தளம் யானை கவுனியைச் சேர்ந்தவர் விமலா குமுதா. திருநங்கையான இவர் மற்றொரு திருநங்கைகள் அணி தலைவி. இந்த இரண்டு திருநங்கை அணிகள் இடையே பணம் வசூல் செய்வதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சல்மா அணியை சேர்ந்த திருநங்கைகள் பத்துக்கும் மேற்பட்டோர் விமலா குமுதா அணியில் சேர்ந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4 மணி அளவில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள சல்மா அணியை சேர்ந்த தில்ஷா வீட்டிற்கு விமலா குமுதா அணியைச் சேர்ந்த திருநங்கைகள் வந்தனர். தில்ஷா வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். வீட்டில் இருந்த 12 பவுன் நகைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்ஷா மற்றும் சல்மா ஆகியோர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சுமித்ரா மற்றும் தியா ஆகிய திருநங்கைகளை பிடித்து பேசின் பிரிட்ஜ காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையறிந்த விமலா குமுதா அணியினர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது திருநங்கைகள் சிலர் ஆடைகளை கலைந்து அரை நிர்வாணத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே காவல் நிலையம் வெளியே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது இருதரப்பிலும் கற்களை மாறி மாறி வீசி வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து திருநங்கை சல்மா புகார் கொடுத்தார். பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை தியா என்ற தீபன், திருநங்கை சுமித்ரா என்ற விஜயகுமார், திருநங்கை சுவாதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்கேப் ஆன ஐந்து திருநங்கைகளை தேடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் முன்பு திருநங்கைகள் அரை நிர்வாணமாகப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மே 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி