பல்லடத்தில் பாஜக நிர்வாகி ஆதாரம் வெளியீடு | irregularities in the sale of alcohol | palladam
டிஸ்க்: பல்லடத்தில் பாஜக நிர்வாகி ஆதாரம் வெளியீடு / irregularities in the sale of alcohol / palladam திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக நகர தலைவர் பன்னீர் செல்வகுமார் தனது குழுவினருடன் விதிமீறி செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளை GPS (glopal positioning system) உதவியுடன் வீடியோ எடுத்து வெளியிட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் ஸ்டாண்ட், பனப்பாளையம், ராயர்பாளையம், வெட்டுபட்டான் குட்டை, தாராபுரம் ரோடு, நாரணாபுரம் ஆகிய மதுக்கடைகளுக்கு விசிட் செய்த பன்னீர் செல்வக்குமார் காலை 7.30 மணிக்கே கடைகளில் குடிமகன்கள் குவிந்திருந்தது மற்றும் பார்கள் விழாக்கோலம் பூண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து தனது மொபைல் போன் ஜி.பி.எஸ். கேமரா உதவியுடன் வீடியோ, புகைப்படம் எடுத்தார். அதில் கடை உள்ள பகுதி, நாள், நேரம் உள்ளிட்ட அனைத்தும் பதிவாகி உள்ளது. பல்லடம் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும், காலை முதலே பகிரங்கமாக மது விற்பனை நடப்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் மதுகடைகளில் மாமூல் பெற்றுக்கொண்டு விதிமீறலை கண்டு கொள்ளாமல் இருப்போருக்கு இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விதிமீறல் மது விற்பனையை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.