பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் 95 சதவீத மாணவர்களும், கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வியில் 85 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களும், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் தற்போது மன உளைச்சலில் இருப்பார்கள். அவர்களை பெற்றோர் திட்டாமல் அரவணைக்க வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வந்தவர்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள் கிடையாது. எனவே குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. அதற்கான சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த வீடியோ தொகுப்பு.