உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதாருக்கு அலையும் நிறைமாத கர்ப்பிணி... Coimbatore

ஆதாருக்கு அலையும் நிறைமாத கர்ப்பிணி... Coimbatore

தமிழகத்தில் கடந்த 2017 ம் ஆண்டு முதல் கர்ப்பிணிகள் பிக்மி எனப்படும் தாய் சேய் நல அடையாள அட்டையின் எண் பெற வேண்டும் என்பது கட்டாயம். இதன் வாயிலாக கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் தாய் சேய் நல கவனிப்புகள் அனைத்தும் மென்பொருள்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் கர்ப்ப கால விவரங்களை பதிவு செய்து பிக்மி அடையாள அட்டையை பெறலாம். பிக்மிஎண் இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஜெ. ஜெ. நகர் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்னும் கர்ப்பிணி, பல மாதங்களாக போராடியும் ஆதார் கிடைக்காததால் சிரமப்பட்டு வருகிறார். அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும், பிக்மி எண் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி