உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி அருகே செயல்படும் திறந்த வெளி மது பார் | Aggressive shops | The police who didn't notice

கல்லுாரி அருகே செயல்படும் திறந்த வெளி மது பார் | Aggressive shops | The police who didn't notice

கல்லுாரி அருகே செயல்படும் திறந்த வெளி மது பார் | Aggressive shops | The police who didnt notice | Pandalur தமிழக - கேரளா எல்லை பகுதியாக உள்ளது பந்தலூர் அருகே தாளூர். இங்கு சாலையின் ஒரு பகுதி தமிழக எல்லையிலும், மறு பகுதி கேரளா எல்லையிலும் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தோர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவு வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. இதே பகுதியில் தமிழக போலீஸ் சோதனை சாவடி மற்றும் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. கேரளா மாநில எல்லைக்குள் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அந்தப்பகுதி வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், பொதுமக்கள் வாகனங்களுக்கு காத்திருக்கும் பகுதியாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு நேர் எதிரில் தமிழக எல்லைக்குள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கேரளாவை சேர்ந்த பலரும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி உள்ளனர். இந்தக் கடைகள் பெரும்பாலான நேரங்களில் குடிமகன்களின் பாராக செயல்பட்டு வருவதால் குடிமகன்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி சோதனை சாவடி அமைந்துள்ள நிலையில் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. தமிழக எல்லைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

ஜூன் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை