கோவை-சத்தி சாலையில் கும்மிருட்டில் திக்... திக்... பயணம்
கோவை-சத்தி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் அகலம் குறைவான இடங்களில் சாலை தடுப்பான் இல்லாமல் இருவழி சாலையாகவும், அகலம் அதிகமான இடங்களில் சாலை நடுவில் தடுப்பான் அமைத்து நான்கு வழி சாலையாகவும் உள்ளது. இரவில் சாலையோரம் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். சில இடங்களில் ஒற்றை சாலையாக இருக்குமிடத்தில் இருட்டாக இருப்பதால் வாகனங்கள் எதிர் எதிராக மோதி விபத்துக்குள்ளாகின்றன. சாலையோரம் விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 28, 2025