ஜூனியர் தேசிய குதிரையேற்றம் போட்டியில் கோவை வீரர்கள் அசத்தல்
ஜூனியர் தேசிய குதிரையேற்றம் போட்டியில் கோவை வீரர்கள் அசத்தல் | Athletes excel in Junior National Equestrian Games | Equine dreams Riding School | Coimbatore ஜூனியர் தேசிய குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் பெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான ஜூனியர் தேசிய குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கோவையில் இருந்து 10 மாணவர்கள் பங்கேற்றனர். 10 - 12, 13 - 14, 15 - 18 மற்றும் 19 - 20 வயதுக்கு உட்பட்ட ஸ்ஷோ ஜம்பிங், டிரஸ்ஆஸ் என, 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் கோவை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 11 மெடல்கள் வென்று அசத்தினர். வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் ஜெர்மனியில் நடக்க உள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். கோவையில் 10 ஆண்டுகளுக்கு மேல் குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று வீரர்கள் சாதித்து வருகின்றனர். குறிப்பாக கோவை மாணவர்கள் குதிரையேற்றம் போட்டியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் வீரர்களுக்கு முறையான பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது குதிரையேற்ற போட்டி சற்று கடினமானாது தான். அதையும் தாண்டி சென்றால் தான் பதக்கங்கள் வெல்ல முடியும் என வீரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.