அவகொடா விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டலாம்…
கோவை மாவட்டம் அன்னுார் அருகே அவகொடா பழம் பயிரிடப்படுகிறது. இதற்கு நல்ல விலை கிடைக்கும். இதனால் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அன்னுார் வெப்பமான பகுதி. அங்கேயே இது நன்றாக விளைகிறது. நிழல் பகுதி மட்டுமல்லாமல் வெப்பமான பகுதியிலும் இது விளைவதால் விவசாயிகள் எல்லா இடங்களிலும் சாகுபடி செய்கிறார்கள். வெண்ணையில் என்னென்ன சத்தான பொருட்கள் இருக்கிறதோ அவையெல்லாம் அவகொடா பழத்தில் உள்ளன. ஆனால் கொழுப்பு கிடையாது. அவகொடா பழத்தை நகர் பகுதிகளில் அதிகம் பேர் வாங்குகிறார்கள். லாபம் தரும் அவகொடா பழ சாகுபடி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 31, 2025