பெண்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெட்டாத்தம்மன்
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள மலை மீது பெட்டாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. கன்னட மொழியில் பெட்டா என்றால் மலை என்றும், அதில் குடியிருக்கும் அம்மன் பெட்டாத்தம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையில் உள்ள குகையில் தான் பெட்டாத்தம்மன் அமர்ந்து அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கிக்கொண்டு இருக்கிறார். கோவிலில் தாயார் மற்றும் அவரது இரு காவலர்களான அனுமன் மற்றும் கருடன் உள்ளனர். இந்த கோவிலுக்கு முக்கியமாக குழந்தை வரம் பிராத்தனைக்காக மக்கள் வருவது வழக்கம். அப்படி அவர்களின் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் மூங்கிலால் செய்யப்பட்ட சிறிய தொட்டிலை பெண்கள் இங்குள்ள மரத்தில் கட்டி வைப்பது வழக்கம். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 05, 2024