அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 398 பேர் விறு விறுப்பான ஆட்டம்
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 398 பேர் விறு விறுப்பான ஆட்டம் / Tiruppur / carrom tournament Student participation மாணவ, மாணவியர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறு மைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. திருப்பூர் வடக்கு குறுமைய தனிநபர் மற்றும் குழு கேரம் போட்டி குமார்நகர் பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். பிஷப் பள்ளி தாளாளர் மரியஆண்டனி தலைமை வகித்தார். பிஷப் பள்ளி தலைமை ஆசிரியர் பிட்டர்மரியதாஸ் போட்டிகளை துவக்கி வைத்தார். வடக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து, 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், 218 மாணவர்கள், 180 மாணவியர் என, 398 பேர் பங்கேற்றனர். மாணவியர் இரட்டையர், 14, 17 மற்றும் 19 வயது ஆகிய 3 பிரிவில், ஸ்ரீசாய்பள்ளி வெற்றி பெற்றது. தனிநபர் பிரிவு மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. செல்வி, ராஜா, பூபாலன், சிவக்குமார், அருண், நடராஜ், வைதேகி, ஜமீலா, காஞ்சானா ஆகிய விளையாட்டு ஆசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றினர்.