உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குண்டு வெடிப்பு... அன்றும்... இன்றும்... Coimbatore

கோவை குண்டு வெடிப்பு... அன்றும்... இன்றும்... Coimbatore

கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி சங்கிலி தொடர் போன்று குண்டுகள் வெடித்தன. தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்த பாஜ.. தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனியார், அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்தியாவையே உலுக்கிய இந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பு காரணமாக கோவையின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்திலிருந்து கோவை மீண்டெழ பல ஆண்டுகள் ஆனது. குண்டுவெடிப்பின்போது கோவை எப்படி இருந்தது என்பதையும், இப்போது கோவை எப்படி உள்ளது என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ