உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் வற்றிய குளங்கள் சரிந்த நிலத்தடி நீர்மட்டம் | Coimbatore

கோவையில் வற்றிய குளங்கள் சரிந்த நிலத்தடி நீர்மட்டம் | Coimbatore

கோவை மாவட்டத்தில் முறைப்படுத்தப்பட்ட குளங்கள், முறைப்படுத்தப்படாத குளங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதேபோல குடிநீருக்கும் ஆங்காங்கே பற்றாக்குறை நிலவி வருகிறது. கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களும் வற்றி விட்டன. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் பெரும்பாலானவற்றில் தண்ணீர் இல்லை. கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் தண்ணீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தியதால் அவற்றின் நீர் மட்டம் சரிந்து விட்டது. எனவே தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென்றால் மழை நீரை சேமிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை வீடு மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நாம் உருவாக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் சரிந்த நிலத்தடி நீர்மட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை