வாயில்லாத ஜீவன் தெய்வம் மாதிரி... மறுவாழ்வு தரும் இளைஞர்
கோவையில் கைவிடப்படும் மாடுகள், அறுவைக்கு செல்லும் மாடுகள் போன்றவற்றை கோவையில் உள்ள சமூக நல ஆர்வலர் விகாஸ் மனோத் காப்பாற்றி, பராமரித்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கோவை மாவட்டத்தில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். கோவையின் பல பகுதிகளில் உள்ள பசு மாடுகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது உரிமையாளர்களால் கைவிடப்பட்ட பசுக்கள் ஆகியவற்றை கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். மாடுகளை பராமரித்து வரும் அந்த இளைஞரின் சேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 31, 2024