மண் அள்ள தொழிலாளர்களிடம் கெடுபிடி | Declining pottery industry | Udumalpet
மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சக்கரை அல்லது பனை வெல்லம், கருப்பட்டி, உப்பு, கடுக்காய் மற்றும் வண்ண பவுடர் சேர்த்து நன்றாக குழைத்து சக்கரத்தின் நடுவில் வைத்து சக்கரம் வேகமாக சுழலும் போது மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. மண் பாத்திரங்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நடைமுறையை பலர் மறந்து வருகின்றனர். எனினும் விளக்கு, முகூர்த்த பானை, தாளப் பானை, பூத்தொட்டி, அகல்விளக்கு உள்ளிட்ட மண்பாண்டங்களுக்கு மவுசு குறையவில்லை. அலுமினிய பாத்திரங்களில் சமைத்து உண்பதால் ஏற்படும் பல்வேறு நோய் தாக்கத்திலிருந்து விடுபட மண்பாண்டங்களில் சமைக்கும் சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. மண் எடுப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. டிப்பர் லாரிகளில் மண் கொள்ளை ஜோராக நடக்கிறது. ஆனால், ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் நீர் நிலைகளில் மண் அள்ள ஏகப்பட்ட கெடுபிடிகளை அதிகாரிகள் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடுமலை மருள்பட்டியில் மண்பாணடம் தயாரிக்கும் தொழிலில் சிலர் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். மாற்று தொழில் தெரியாததால் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.