உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்! எங்கு படிக்கலாம்! கோவையில் வழிகாட்டுகிறது தினமலர் | DInamalar

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்! எங்கு படிக்கலாம்! கோவையில் வழிகாட்டுகிறது தினமலர் | DInamalar

தினமலர் நாளிதழ் சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, தினமலர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் தொடங்கி 25ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் , எங்கு படிக்கலாம் போன்ற குழப்பங்களுக்கு ஒரே கூரையின் கீழ் தீர்வு அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என்ற இரு பிரிவுகளாக நிகழ்ச்சி நடக்கிறது. 130 முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைந்துள்ளன. இதன் வாயிலாக ஒரே கூரையின் கீழ் கல்லுாரிகளினால் வழங்கப்படும் பாடப் பிரிவுகள், சேர்க்கை விபரங்கள். கட்டணம். விடுதி வசதி உள்ளிட்ட அனைத்தும் தெரிந்து கொள்ளலாம். கருத்தரங்கில் அனைத்து துறை வல்லுநர்களும் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர். கருத்தரங்கில் கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளித்து, லேப் டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளையும் தட்டி செல்கிறார்கள். கோவையில் நடக்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி