முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டி | District Badminton Tournament
முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டி / District Badminton Tournament / Collector qualified for the quarter - finals கோவையில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கு செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர்., கல்லுாரியில் இறகுப்பந்து போட்டி நேற்றும், இன்றும் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 64 பேரும், இரட்டையர் பிரிவில் 32 பேரும் போட்டியிட்டனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 23 பேரும், இரட்டையர் பிரிவில் 18 பேரும் பங்கேற்றனர். கலெக்டர் பவன்குமார் ஒற்றையர் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் வீரர் தனபாலை 21-8, 21-7 என்ற புள்ளிகளிலும், இரண்டாம் போட்டியில் வீரர் சங்கர் குமாரை, 21-6, 21-6 என்ற புள்ளிகளிலும், மூன்றாம் போட்டியில் யோகராஜாவை, 21-9, 21-9 என்ற புள்ளிகளிலும் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் வீரர் கிளாசன் ஆலிவர் 21-9, 21-7 என்ற புள்ளிகளில் வீரர் பைரவனை வென்றார். தொடர்ந்து போட்டிகள் நடக்கிறது. இதில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.