உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் களைகட்டிய சிறப்பு கூடைப்பந்து போட்டி | Basketball | Coimbatore

கோவையில் களைகட்டிய சிறப்பு கூடைப்பந்து போட்டி | Basketball | Coimbatore

சிற்றுளி பவுண்டேஷன், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மையம் சார்பில் கோவை கவுண்டம்பாளையத்தில் சிறப்பு கூடை பந்து போட்டி நடக்கிறது. பொது பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கு 3 பேர் கூடைப்பந்து போட்டியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தென் மண்டல அளவில் வீல் சேர் கூடை பந்து போட்டியும் நடந்தது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. வீல் சேர் கூடைப்பந்து ஆண்கள் பிரிவில், கர்நாகடா ஏ அணி 7 - 6 என்ற புள்ளிக்கணக்கில் கோவை ஏ அணியையும், பெண்கள் பிரிவில், கர்நாடகா ஏ அணி 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடகா பி அணியையும் வீழ்த்தின. மாணவர்கள் பொது பிரிவில் ராஜலட்சுமி மில்ஸ் அணி 19 - 17 என்ற புள்ளிக்கணக்கில் மான்ஸ்டர் அணியையும், மாணவியர் பிரிவில், பாரதி பள்ளி ஏ அணி 9 - 8 என்ற புள்ளிக்கணக்கில் பாரதி பள்ளி பி அணியையும் வீழ்த்தின.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை