ரயில்வே ஊழியர் உட்பட ஏழு பேர் கைது | drug smuggling raid | Kovai
கோவையில் போதை பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போத்தனூர் பகுதியில் நேற்றிரவு துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் போத்தனூரை சேர்ந்த போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் என தெரிய வந்தது. விசாரணையில் கோவையில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த பப்பு ராஜ் என்பவர் வலி நிவாரணத்துக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை ரயில் மூலம் கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. ரயிலில் மாத்திரைகளை கடத்துவதற்காக பப்புராஜூக்கு கோவையை சேர்ந்த சிக்கந்தர் என்ற அசிஸ்டன்ட் ரயில்வே ஊழியர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் பப்புராஜ், சிக்கந்தர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7800 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.