உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடற் கூறாய்வில் யானையின் வயிற்றைப்பார்த்து டாக்டர்கள் ஷாக் |elephant death | shocking death report

உடற் கூறாய்வில் யானையின் வயிற்றைப்பார்த்து டாக்டர்கள் ஷாக் |elephant death | shocking death report

உடற் கூறாய்வில் யானையின் வயிற்றைப் பார்த்து டாக்டர்கள் ஷாக் / elephant death / shocking death report/ covai கோவை மருதமலை அடிவாரத்தில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. அடிக்கடி கோயில் அன்னதான கூடத்திற்கு விசிட் அடிப்பது வழக்கம். இந்நிலையில் மே 17ம் தேதி பாரதியார் யுனிவர்சிட்டி மேற்கு பகுதியில் ஒரு பெண் யானை மயங்கி கிடந்தது. அருகில் இருந்த குட்டி, தாயைப் பார்த்து பரிதவித்து போனது. ஸ்பாட்டிற்கு விரைந்த வனத்துறையினர் பெண் யானைக்கு முதலுதவி செய்தனர். தாய் யானை மயக்கம் தெளிந்து மெல்ல அசைந்தது. தாயின் உடலில் அசைவை பார்த்ததும், குட்டியானை தனது தும்பிக்கையால் தாயை வருடி எழுப்ப முயன்றது. அங்கும் இங்கும் ஓடி பாச போராட்டம் நடத்தியது. மயங்கிய யானையை எழுப்ப, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, துரியன் மற்றும் சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டது. யானை அசைந்து நகர்ந்தவுடன், கிரேன் மூலம் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினர். தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை அளித்தனர். உணவு தேடி அலைந்த போது, வெயிலின் தாக்கத்தில் யானை மயங்கி விழுந்ததாக வனத்துறையினரின் நினைத்தனர். பெண் யானைக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் பிரத்தியேக உணவு கொடுக்கப்பட்டது. யானையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வனத்துறை தெரிவித்தது. ஐந்து டாக்டர் கொண்ட சிறப்பு குழு யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெண் யானை நேற்று மாலை பரிதாபமாக உயிர் இழந்தது. இன்று காலை பெண் யானைக்கு வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல் கண்டறியப்பட்டது. யானையின் வயிற்றில் சுமார் 15 மாத மதிக்கத்தக்க குட்டி இருந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதம். இறந்த பெண் யானை வயிற்றில் இருந்த குட்டிக்கு, கால் மற்றும் தும்பிக்கை நன்கு வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. இறந்த குட்டியை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் பெண் யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் ஒட்டி இருந்தது. பிளாஸ்டிக்கில் பல புழுக்கள் நெளிந்தன. கருவுற்ற யானைக்கு முறையாக சிகிச்சை வழங்காத வனத்துறையின் அலட்சியத்தை வனவிலங்கு ஆர்வலர்கள் கடுமையாக சாடினர். வனப்பகுதியில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது . ஆனால் யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவு கிலோ கணக்கில் இருந்தது. வனவிலங்கு இருப்பிடத்தில் மனித ஆக்கிரமிப்பு இருப்பதால் விலங்குகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !