பரிசிலில் வாழைத்தார்களை கொண்டு செல்லும் விவசாயிகள் | Farmers crossing the river at parisil | covai
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி சாகர் அணையின் கீழ் பகுதிகளில் 3000 ஏக்கரில் வாழை சாகுபடி நடக்கிறது. நீலகிரியில் பெய்யும் கன மழையால் பவானி ஆற்றின் கரைகளை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்த வாழைத்தார்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் பரிசலில் வாழைத்தார்களை ஏற்றி விவசாயிகள் ஆற்றை கடக்கின்றர். ஆர்ப்பரித்து ஓடும் பவானி ஆற்றின் இரண்டு கரைகளையும் இணைத்து கயிறுகளை கட்டினர். அதன் ஒரு முனையை பரிசலில் கட்டி வாழை தார்களை ஏற்றி கயிற்றால் பரிசலை இழுந்து கரை சேர்க்கின்றனர். தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பவானி சாகர் அணை நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன்பே வாழை அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.