திருமூர்த்தி அணை நீர் தர மறுத்தால் போராட்டம்; விவசாயிகள் | Farmers protest demanding water supply
திருமூர்த்தி அணை நீர் தர மறுத்தால் போராட்டம்; விவசாயிகள் | Farmers protest demanding water supply திருமூர்த்தி அணை நீர் மூலம் பாசன வசதி பெறும் தொண்டாமுத்தூர், விரல்பட்டி, , புளியம்பட்டி, உப்பிலியனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு 2ம் சுற்றுக்கு ஏழு நாட்கள் தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 7 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் உடுமலை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். கோடை வறட்சியால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வரும் நிலையில் 7 நாட்களுக்கு தண்ணீர் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.