உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கால் இறுதியில் கல்லூரி அணியினர் கலக்கல் வெற்றி | Quarter finals| Football tournament| Covai

கால் இறுதியில் கல்லூரி அணியினர் கலக்கல் வெற்றி | Quarter finals| Football tournament| Covai

கால் இறுதியில் கல்லூரி அணியினர் கலக்கல் வெற்றி | Quarter finals| Football tournament| Covai பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட சி-மண்டலம் கல்லூரி ஆண்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது போட்டிகள், ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் செப்டம்பர் 15ம் தேதி துவங்கியது இன்று ஆட்டத்தின் கால் இறுதி போட்டி இன்று நடத்தப்பட்டது. முதல் கால் இறுதி போட்டியில், ரத்தினம் கல்லூரி அணி, 7-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா அணியை வெற்றி பெற்றது. இரண்டாம் கால் இறுதியில் எஸ்.என்.ஜி.சி., அணி, 4-0 என்ற கோல் கணக்கில் ஏ.ஜே.கே., அணியை வென்றது. மூன்றாம் கால் இறுதியில் நேரு கல்லூரி அணி, 6-5 என்ற கோல் கணக்கில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணியை வென்றது. நான்காம் கால் இறுதி ஆட்டத்தில் வி.எல்.பி., அணி, 6-0 என்ற கோல் கணக்கில் என்.ஜி.எம்., அணியை வீழ்த்தியது தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன. விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை