ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணியினர் அசத்தல் வெற்றி| Football tournament| Inter polytechnic college
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணியினர் அசத்தல் வெற்றி| Football tournament| Inter polytechnic college sports event| covai கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று துவங்கியது . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் களத்தில் உள்ளனர். போட்டிகளை கல்லூரி முதல்வர் கிரிராஜ் துவக்கி வைத்தார். முதல் போட்டியில் எஸ் .ஆர். எம். வி., பாலிடெக்னிக் அணி மற்றும் ஸ்ரீ பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் மோதியது. இதில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் எஸ். ஆர். எம். வி., அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நடைபெற்ற போட்டியில் சூலூர் ஆர்.வி.எஸ் பாலிடெக்னிக் மற்றும் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணிகள் மோதினர். இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 4-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகளை, PSG பாலிடெக்னிக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முரளி கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். விறு விறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.