வனத்துக்குள் பாயும் கழிவுநீர்... பலியாகும் விலங்குகள் உயிர்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் ஓடந்துறை ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள உணவகங்கள், ஒர்க் ஷாப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படுகிறது. இவற்றை வனவிலங்குகள் தவறுதலாக குடிக்கும் போது உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த சாக்கடை நீர், வனவிலங்குகள் மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவுவதாகவும் கூறப்படுகிறது. சாக்கடை நீரால் வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் பாதிப்படைவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 05, 2024