உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நடத்தையில் சந்தேகத்தால் ஏற்பட்ட துயரம் | Girlfriend murder Boyfriend arrested | Kovai

நடத்தையில் சந்தேகத்தால் ஏற்பட்ட துயரம் | Girlfriend murder Boyfriend arrested | Kovai

கோவை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று மாலை இளம் பெண்ணுடன் வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். இன்று அதிகாலை வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை காலி செய்து விட்டு வெளியேறிவதை கண்டு விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று எட்டிப் பார்த்தனர். அங்கு அவருடன் தங்கி இருந்த இளம் பெண் முகத்தில் காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு விடுதி ஊழியர்கள் தகவல் கூறினர். காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்தனர். அவர் சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூரை சேர்ந்த சரவணன், விடுதியில் இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ் குளம் அருகே கள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா என தெரியவந்தது. அப்பெண் கோவை அவிநாசி சாலையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்து ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வந்துள்ளார். அண்ணன், தங்கை உறவுமுறை கொண்ட கீதாவும், சரவணனும் காதலித்து வந்துள்ளனர். வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்தனர். திருமணத்தை பதிவு செய்யவில்லை. அவர்களது திருமணத்தை இரு குடும்பத்தினரும் ஏற்கவில்லை. இருந்தாலும் கீதாவும், சரவணனும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டனர். அதேபோல் அறை எடுத்து விடுதியில் தங்கி இருந்த போது சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கீதாவின் நடத்தையில் சரவணன் சந்தேகம் அடைந்தார். நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் கையால் குத்தி தலையில் சுவற்றில் மோத செய்ததாக தெரிகிறது. இதில் பரிதாபமாக கீதா இறந்தார். சரவணனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை